புதுடெல்லி செப், 29
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுவரை இந்தியா ஆறு தங்கம், ஒன்பது வெள்ளி, பதினோரு வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது 167 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.