நெல்லை ஆகஸ்ட், 20
நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மேலும் நவீன ஆய்வகம் மூலம் அறிவித்திறன் பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி ஆண்டு விழா எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்காட் கல்லூரி கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் பிரியதர்ஷினி, அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை காவல் துணை ஆணையர் துணை சீனிவாசன் ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டிக்கான கொடியையும் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மாணவ-மாணவிகளின் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துணை ஆணையர் சீனிவாசன் பரிசு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி துணை ஆணையர் தலைமையில் மாணவர்களும், பெற்றோர்களும் எடுத்துக் கொண்டனர்.