happy milad un nabi festival card with mosque design
Spread the love

செப், 28

இஸ்லாமியர்களின் புனித விழாக்களில் ஒன்று மிலாடி நபி. இந்த பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடுகிறோம். முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மிலாடி நபி செப்டம்பர் 28 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

மிலாடி நபி கொண்டாடும் முறை :

இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள் அனைவரும் இறை தூதரான முகம்மது நபியை நினைத்து சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்த நாளில் தங்களின் நண்பர்கள், உறவினர்களை அழைத்து பரிசுகள் வழங்கி, ஒருவர் மற்றவரின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது, ஒன்றாக சேர்ந்து உணவ சமைத்து உண்பது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்கள், மிலாடி நபியை வேறு விதமாக கொண்டாடுவார்கள். சன்னி இஸ்லாமியர்கள் மிலாடி நபியை ரபி உல் அவல் மாதத்தின் 12 ம் நாளிலும், ஷியா முஸ்லீம்கள் 17 வது நாளிலும் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முகம்மது நபியின் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்தது ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் புத்தாடை உடுத்தி, சிறப்பு தொழுகை, வாழ்த்துக்கள் பரிமாறுதல் என பழக்கமான கொண்டாட்டத்துடன் மிலாடி நபியை கொண்டாடுவார்கள்.

தனது வாழ்நாளில் ஒழுக்கத்தை கடைபிடித்த புனிதமான நபர் நபிகள் நாயகம். அவரை நினைவுகூர்ந்து, அவருடைய வழியில் அனைவரும் நடக்க வேண்டும். அவருடைய போதனைகளை பின்பற்றி அனைவரும் அல்லாஹ்வின் அன்பிற்கு உரியவர்களாக இருக்க வேண்டும் என்பதே மிலாடி நபி கொண்டாடப்படுவதன் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *