பெங்களூரு செப், 26
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்புக்கு போராட்டம் நடைபெறுகிறது. காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பந்தில் பங்கேற்கும் வகையில் ஹோட்டல்கள், ஆட்டோ, தனியார் வாகனங்கள் எதுவும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.