சென்னை செப், 26
தமிழில் ராஜா ராணி உட்பட நான்கு வெற்றி படங்களை கொடுத்த அட்லீ, அதைத்தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கினார். பான் இந்தியா படமாக உருவான ஜவான் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இதில் அறிமுகப்படுத்திய ஆயிரம் கோடி வசூலை ஈட்டிய இயக்குனர் என்ற புதிய சாதனையை அட்லி படைத்துள்ளார். இதையடுத்து திரையுலகினர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.