ஹாங்சோ செப், 24
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் வாலிபால் கால் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. ஹாங்சோ நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் பலம் வாய்ந்த சீன தைபே அணியுடன் இந்தியா மோதியது. இதில் இந்திய அணி 25-22, 25-22, 25-21 என்ற செட் கணக்கில் சீனதைபேயை வெற்றி பெற்று, கால் இறுதிக்குள் கால் பதித்தது. இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் முந்தி நிற்கும் ஜப்பானுடன் இந்திய அணி களத்தில் மோத உள்ளது.