சென்னை செப், 21
இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ. 50,000 பலத்த காயமடைந்தோருக்கு ரூ.25,000 லேசான காயமடைவோருக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பத்து மடங்கு அதிகரித்து மரணங்களுக்கு ரூ. 5 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2.50 லட்சம் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்பட உள்ளது.