இலங்கை செப், 4
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கை பல்லெகெலாவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும் இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.