திருச்சி ஆக, 31
தமிழகத்தில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி உட்பட 25 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்கிறது. கடந்த ஏப்ரல் 1ம்தேதி 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்த நிலையில், ஏனைய சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதில் Oneway கட்டணம் ரூபாய் 5 முதல் 45 வரையும், Two way கட்டணம் ரூபாய் 10 முதல் 65 வரையும் உயர்கிறது. இந்த விலை உயர்வால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.