புதுடெல்லி ஆக, 30
டெல்லி மெட்ரோவில் ஒரே நாளில் அதிக பயணிகள் பயணித்த சம்பவம் நேற்று நடந்தது நேற்று மட்டும் 68.16 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். 10 பிப்ரவரி 2020 அன்று 66.18 லட்சம் பேர் பயணம் செய்தனர். இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. உலக தரம் வாய்ந்த போக்குவரத்து அமைப்பு ஊழியர்களின் முயற்சி மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் இந்த சாதனை சாத்தியமானது என கூறப்படுகிறது.