புதுடெல்லி ஆக, 29
அதானி குழுமம் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பது செபி அமைத்த குழுவின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனங்களில் ஊழல் நடந்ததாக ஜனவரி 24 ம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் புயலை கிளப்பியது. இந்த புகார் குறித்து செபி நடத்திய விசாரணையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் வரையறைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதில் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.