புதுடெல்லி ஆக, 28
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டியெறிதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் உலக தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தான் வீரர் ஷர்ஷத் நசீம் வெள்ளி வென்றுள்ளார்.