பஞ்சாப் ஆக, 27
பஞ்சாபில் ஆட்சியை கலைக்க நேரிடும் என்று இரு தினங்களுக்கு முன் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வரை எச்சரித்திருந்தார். அதற்கு பதில் அளித்திருக்கும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் அமைதியை விரும்பும் பஞ்சாப் மக்களை அச்சுறுத்த வேண்டாம். சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மணிப்பூரில் தான் அது கெட்டுள்ளது. அந்த ஆளுநர் பேசுவாரா என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.