துபாய் ஆக, 26
ஐக்கிய அரபு அமீரக துபாயில் இந்தியர்களுக்கான இலவச காப்பகமாக செயல்படும் “தமிழ் குடில்” காப்பகத்தில் மனித பண்பாளரும், அன்னதானத்தில் தலை சிறந்து விளங்குபவரும், கேப்டன் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜய்காந்த் பூரண உடல்நலம் வேண்டி கூட்டு பிரார்த்தனையுடன் சிறப்பு அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு தமிழ் குடில் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில், ஈமான் தமிழ் சமூக அமைப்பின் அமைப்பின் செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி முதன்மை நெறியாளரும் தேமுதிக அமீரக பிரிவு செயலாளருமான கமால் கேவிஎல், அமீரக நண்பன் குழு தலைவர் முத்துமணி ராமலிங்கம், வணக்கம் பாரதம் வார இதழ் வளைகுடா இணை ஆசிரியர் நிருபர் நஜீம் மரிக்கா, சமூக ஆர்வலர் டைகர் ரவி, அமீரக தேமுதிக சின்னா என்ற சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் கலந்து கொண்ட அனைவரும் கேப்டன் விஜய்காந்த் மனித மாண்பை குறிப்பிட்டு, அவரது பூரண உடல் நலம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டனர். அமீரக நண்பன் மற்றும் தமிழ் குடில் நிறுவனர் முனைவர் ஏகே மகாதேவன் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்ட அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.