துபாய் ஆக, 21
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது.
இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் அவைத்தலைவர் காமராஜ், பொருளாளர் சனா சாதிக், மகளிர் அணி செயலாளர் வகிதா பானு, துணைச் செயலாளர்கள் சிவக்குமார், கார்த்திகேயன், செல்வம் சேகர், சின்னா என்ற சின்னசாமி, இளைஞர் அணிச் செயலாளர் கிருஷ்ணா அருணாச்சலம், கேப்டன் என்ற செயலாளர் கேப்டன் சுக்கூர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக Spread Smiles நிறுவனர் RJ சாரா, TEPA பால் பிரபாகர், பாளையங்கோட்டை ரமேஷ், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், தமிழகத்தின் வணக்கம் பாரதம் வாரஇதழ் அமீரக இணைஆசிரியர் நஜீம் மரிக்கா, விடுதலை சிறுத்தை செயலாளர் முத்தமிழ் வளவன், E2B ராஜு, திருநெல்வேலி ரமேஷ், மதிமுக துபாய் நிர்வாகி அண்ணாதுரை, அமீரக தமிழ் பாடகி மிருதுளா ரமேஷ், டிக்டாக் புகழ் மீனு, பாண்டியன் பிரதர்ஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் ஆர்ஜே சாரா கூறும்போது, “தான் கேப்டன் விஜயகாந்தின் பிடித்த ரசிகர் என்றும் கேப்டன் நல்லசுகத்தோடு மீண்டும் பழையமாதிரி வரவேண்டும் வந்து திரைத்துறையிலும் அரசியலிலும் சாதிக்கவேண்டும்” என்று கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.