சென்னை ஆக, 16
சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது பெற்ற எவரெஸ்ட் வீராங்கனை முத்தமிழ்செல்வி தமிழக அரசுக்கு எனது முதல் நன்றி என்று நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர், “நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக தமிழக அரசு சார்பில் 25 லட்சம் வரை கொடுத்து உதவி செய்தனர். இந்த உதவியால்தான் என்னால் எவரெஸ்டில் ஏறி நிற்க முடிந்தது” என்று கூறினார். இவர் தமிழ்நாட்டிலேயே எவரெஸ்ட் ஏறிய முதல் பெண் என்ற சாதனையை படைத்தார்.