பழனி ஆக, 9
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஆடிபரணி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல் திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராடினர்.