இத்தாலி ஆக, 3
இத்தாலியில் நாட்டின் முக்கிய ஆறு வங்கிகள் ஒரே நேரத்தில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இணைய சேவை முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பின்பு இந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை சேர்ந்த நோ நேம் 057 குழு பொறுப்பேற்றது. மேலும் இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கிகளுக்கு பாதிப்பில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.