புதுடெல்லி ஆக, 3
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு, மேற்கு, வடக்கு என பல்வேறு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வரும் நிலையில், தென் மாநிலங்களை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களை அவர் சந்தித்து பேசினார். மேலும் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது