துபாய் ஜூலை, 31
ஐக்கிய அரபு அமீரக துபாயில் கீழக்கரையைச் சேர்ந்த ரஸ்மி மற்றும் அவரது நண்பர் ஹனீபா இணைந்து துபாய் தேராவில் நடத்திவரும் டேஷ்டி பிரியாணி உணவகத்தின் தனது கிளையை துபாயில் இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிரான்ஸ் பில்டிங் பிரிவில் நியூ டேஸ்டி பிரியாணி புதிய உணவக திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார்களாக துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உள்பட அமீரகத்தில் வசிக்கும் கீழக்கரை மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.