சென்னை ஜூலை, 28
2023-24 கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதலில் மாற்று திறனாளி, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கு நடைபெற்றது. இந்நிலையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் www.tneaonline என்ற இணையதளம் வாயிலாக பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.