கடலூர் ஜூலை, 28
கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. NLC க்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெடித்த நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் அறிவித்ததாலும் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாமக போராட்டத்திற்கு காவல்துறையினர் செல்வதால், கால்வாய் அமைக்கும் பணிக்கு காவல் பாதுகாப்பு அளிக்கும் வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.