சென்னை ஜூலை, 27
கோவில்கள் சார்பில் நடத்தப்படும் முழு நேர பகுதி நேர பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்க தொகையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி முழு நேர மாணவர்களுக்கு பயிற்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 3000 ரூபாயிலிருந்து 4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதி நேர பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 1500 இல் இருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.