Spread the love

தர்மபுரி ஆகஸ்ட், 18

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி வழங்கினார்.

அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டியதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடைபாதையை மூழ்கடித்த படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மெயின் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் 12 ம்தேதி தடை விதித்தது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும், கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 248 கனஅடியாக குறைக்கப்பட்டதாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

வெள்ளப்பெருக்கின் போது மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் மெயின் அருவி முற்றிலும் சேதம் அடைந்து உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கியதால் நேற்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் கோத்திக்கால் பரிசல் துறையில் மணல் திட்டு வரை பாறைகளுக்கு பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *