புதுச்சேரி ஜூலை, 21
2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் ₹1,24,414 லட்சம் கோடி வரி வசூல் ஆகியுள்ளது என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், தேசிய அளவில் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் நான்காம் இடத்தில் உள்ளது. நிகர வரி வசூலாக ₹1,08,364 கோடி டிடிஎஸ் மூலமாக ₹60,464 கோடி வசூல் ஆனது என குறிப்பிடப்பட்டுள்ளது.