புதுடெல்லி ஜூலை, 21
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்த இந்திய அணி வலுவான நிலையை உறுதி செய்துள்ளது. இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதும் நூறாவது டெஸ்ட் போட்டியில், ஜெய்வால், கில், ரகானே, ரோஹித் ஆட்டம் இழந்தனர். விராட் கோலி, ஜடேஜா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர்.