புதுடெல்லி ஜூலை, 20
மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் மணிப்பூர் கலவரம் விலைவாசி உயர்வு மற்றும் ஆளுநரை வைத்து ஆட்சிக்கு பிரச்சனை கொடுப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்திய கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசிக்க உள்ளனர் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.