சென்னை ஜூலை, 17
தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவர். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம், செங்கல்பட்டு, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.