மதுரை ஜூலை, 15
மதுரையில் ரூ.206 கோடி ரூபாயில் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இன்று பகல் 11:30 மணிக்கு விமான மூலம் மதுரை செல்லும் முதல்வர் மாலை 5 மணிக்கு நூலகத்தை திறந்து வைக்கிறார். முதல்வரின் வருகையை ஒட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் சாலை- ரவுண்டானா சந்திப்பு வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.