ராஜஸ்தான் ஜூலை, 14
ராஜஸ்தானில் சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வை இழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே கண்பார்வை பறிபோனதாக சிகிச்சை பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சிரஞ்சீவி சுகாதார திட்டத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.