திருப்பதி ஜூலை, 12
திருப்பதி ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி செல்லும் தினசரி திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மறு மார்க்கம் திருப்பதி சென்ட்ரல் வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.