புதுடெல்லி ஜூலை, 3
42 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் அனைத்து அமர்வுகளும் வழக்கம்போல் நடக்க உள்ளது. இன்று மணிப்பூர் விவகாரம், தற்பாலின திருமண சட்ட அங்கீகாரம் கோரிய வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் சிறப்பு அமர்வுகள் மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து, அதில் 700 வழக்குகளும் நீதிமன்றம் தீர்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.