மணிப்பூர் ஜூன், 29
காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்நிலையில் இன்றும், நாளையும் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.