மதுரை ஜூன், 28
மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15 தாக்கல் செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் திட்ட அறிக்கையின் இறுதிக்கட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டோம் எனக் கூறியுள்ளார்.