சென்னை ஜூன், 17
234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் என்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மட்டும் சுமார் 1500 பேர் பங்கேற்க உள்ளனர். காலை 9 மணிக்கு விழா தொடங்குகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் 7:45 முதல் அனுமதிக்கப்படுவார்கள் அவர்களுக்கு காலை மதிய உணவு விருந்தளிக்கிறார் நடிகர் விஜய்.