சென்னை ஜூன், 11
தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஈ சி ஆர் பகுதியில் நேற்று இரவு எட்டு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவில் கடந்தும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.