புதுடெல்லி மே, 29
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்ல இருக்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி நேற்று ராகுலுக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டதையடுத்து இன்று மாலை அவர் அமெரிக்கா கிளம்புகிறார். ஜூன் 4ம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் பேரணியில் ராகுல் பங்கேற்கிறார். கலிபோர்னியாவின் வாஷிங்டனில் குழு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கிறார்.