ரஷ்யா மே, 21
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவிற்கு எதிராக பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்குக்கு ஆயுத உதவி வழங்கி வருகிறது அமெரிக்கா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 500 அமைச்சர்களுக்கு தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரஷ்யா.