சென்னை மே, 20
டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறுவறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இந்த முடிவு எடுத்துள்ளது.