கர்நாடகா மே, 20
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி போல் கர்நாடகா கடலோர மாவட்டங்களில் கம்பாளா நடத்தப்படுவது வழக்கம். பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது போல் கம்பளாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கமலா போட்டி மீதான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது இந்த தீர்ப்பை கர்நாடக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதை அடுத்து இந்த ஆண்டு கம்பளா போட்டி நடைபெற உள்ளது.