ஆந்திரா மே, 19
2024 சட்டமன்ற தேர்தலில் தொகுதிகளிலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் திருக்கோவிலில் பேசிய அவர், இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார். அதனால் தான் உள்ளாட்சி முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.