புதுச்சேரி மே, 18
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 97மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார்.
பள்ளி துணை முதல்வர் ஆஷா ராணி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.