மியான்மார் மே, 17
வங்க கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது. புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. வங்காள தேசத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.