புதுடெல்லி மே, 15
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனுராதாக்கூர், உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது. டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று கூறினார்.