மணிப்பூர் மே, 15
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில், மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் கடத்தப்படுவதும், எரிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாநில அரசு தீவிர முயற்சித்து வருகிறது.