சென்னை மே, 10
தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மே11ல் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி இருவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் டிஆர்பி ராஜா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராஜாவுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.