சென்னை மே, 9
நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வு சற்று கடினமாக இருந்தது என மாணவர்கள் கூறிய நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தது. எனவே மாணவர்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தை படித்தாலே எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தனர்.