துபாய் மே, 4
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அனுமதியுடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் காவல் துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் இணைந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டு துபாய் ஈமான் சார்பில் ரூ. 5 லட்சத்திற்கு மேல் மதிப்பிலான தேவையான உதவிகள் செய்தனர்.
சமீபத்தில் துபாய் புர்ஜ் முரார் பகுதியில் பில்டிங் ஒன்று தீ விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் துபாய் அரசு துறைகளின் விரைவான நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான பில்டிங் விரைவாக சீர் செய்யப்பட்டு ஒரு மாடியை தவிர மற்ற பிளாட்களில் அனைவரும் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக துபாய் ஈமான் கலாச்சார மையம் மற்றும் துபாய் காவல் துறை இணைந்து அங்குள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி துபாய் ஈமான் சார்பில் அங்குள்ளவர்களுக்கு தேவையான படுக்கை விரிப்புகள் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் பழங்கள் என ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்காக ஈமானுடன் இணைந்து டாப் ஸ்டார்குரூப் சேர்மன் கீழக்கரை எஸ் ஆர் பைரோஸ் கான் மற்றும் தொழில் அதிபர் ஹமீது உள்ளிட்டோர் இணைந்து இதனை செய்தனர். ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபிபுல்லா கான், துணைத் தலைவர் ஏ.ஜே கமால், பொருளாளர் பிலாக் துளிப் யஹ்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் ஈமானின் சிறப்பான பணிகளை காவல்துறை மற்றும் இதர அரசு துறையினர் பாராட்டினர். பில்டிங்கில் குடி இருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வு ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில்
ஈமான் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து பொருட்களை ஒவ்வொரு பிளாட்டாக சென்று வழங்கினர்.
M. நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.