Spread the love

புதுக்கோட்டை ஆகஸ்ட், 15

புதுக்கோட்டை நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாரதியஜனதா சார்பில் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். ஊர்வலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பு தொடங்கி சத்தியமூர்த்தி சாலை வழியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் வழியாக கோர்ட்டு வளாகத்தை வந்தடைந்தது. அங்கு உள்ள தீரர் சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பாரதியஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அரிமளம் பேரூராட்சி எட்டாம் மண்டகபடி பகுதியில் நடிகை கவுதமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக கடையக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேசிய கொடியினை பறக்கவிட்டபடி இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *