சென்னை ஏப்ரல், 29
நடப்பாண்டில் மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு 12 மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். தொடர்ந்து, தூர்வாரும் பணிகள் எப்போதும் முடியும் என கேள்வி எழுப்ப தூர்வாரிய பின்னர் முடிவடையும் எனது நக்கலாக பதில் அளித்தார்.